'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'தி வாரியர்' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் இங்கு படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலுக்கு பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கும். அது வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் ராம் பொத்தனேனியும், நாயகி ஸ்ரீலீலாவும் மைசூரை சுற்றி பார்க்க கிளம்பி விடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.