சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

1975ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.ஜி.ஜார்ஜ். இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய 'ஊழ்க்கடல்'(1979), 'மேளா'(1980), 'யவனிகா'(1982), 'லேகாயுடே மரணம் ஒரு ப்ளாஷ்பேக்'(1983) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கினார். 9 கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளர். மலையாள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினார். மலையாள இயக்குனர்களில் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்பட்டு வந்தார்.
77 வயதாகும் ஜார்ஜ் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி விட்டார். என்றாலும் மலையாள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் அவரை சந்தித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (செப்.24) கொச்சியில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




