புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

விடுதலை, விடுதலை 2, ஹாட் ஸ்பாட் 2 படங்களின் ஹீரோயின் பவானிஸ்ரீயிடம் பெண்கள் தினம் குறித்து தினமலரிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்... ‛‛உலகில் இருக்கிற அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள். பெண்கள் இன்று ஒருநாளை மட்டும் பெண்கள் தினமாக கொண்டாட வேண்டியதில்லை. நமக்கு ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம்தான். காரணம், சமூகத்தில் நம் பங்களிப்பு அப்படி. ஆனால், இந்த நாளை பெண்கள் தினமாக அங்கீகரித்து இருப்பதால் கூடுதல் சிறப்பு.
பெண்கள் என்றால் தைரியம், அன்பு, பாசம், பலம், எனர்ஜி, தியாகம் என பல விஷயங்களை சொல்லிட்டு போகலாம். இப்ப, பெண்கள் அனைத்து விஷயத்திலும் வளர்ந்து வருகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். குடும்பத்தை பார்த்துக் கொண்டே, தனிப்பட்ட முறையிலும் ஜெயிக்கிறார்கள். அந்த வளர்ச்சி வியக்க வைக்கிறது, அது அழகானது. இந்த தலைமுறை பெண்கள் அனைத்து துறைகளிலும் ஜொலிக்கிறார்கள். அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.
என் வாழ்க்கையில், என்னை சுற்றி நிறைய வெற்றிகரமான பெ ண்கள் இருக்கிறார்கள். என் வெற்றிக்கும் அவர்கள் பங்கு முக்கியமானது. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள், நண்பிகள், பெண் இயக்குனர்கள், சக பெண் கலைஞர்கள் என பலரின் பங்களிப்பால், அவர்களின் ஆசியால், முன்உதாரணத்தால் , ஊக்கத்தால்நான் வளர்ந்து இருக்கிறேன். எனக்கு நடிப்பு பயிற்சி அளித்த நடிகை கலைராணி மேடத்தையும் நான் இப்போது நன்றியோடு பார்க்கிறேன். இப்படி உங்கள் வாழ்வில் பல பெண்கள் இருந்து இருப்பார்கள், அவர்களை இந்த நேரத்தில் நினைத்து பாருங்கள், அவர்களுக்கு நன்றி கூறுங்கள்''.
இவ்வாறு பவானிஸ்ரீ தெரிவித்துள்ளார்.




