ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக மாறி வருபவர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெற்றியை ருசித்து வரும் டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் அஜயன்டே ரெண்டாம் மோசனம் (ஏஆர்எம்) என்கிற பீரியட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரமிக்க வைத்தார் டொவினோ தாமஸ். இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை நேரில் சந்தித்துள்ளார் டொவினோ தாமஸ். தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று (செப்-27) வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக கேரளாவுக்கு வருகை தந்த சமயத்தில் தான் சூர்யாவையும், கார்த்தியையும் டொவினோ நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள டொவினோ தாமஸ், “நான் ஒரு நடிகராக உருவாவதற்கு கார்த்தி, சூர்யா இருவருமே எனக்கு அவரவர் வழியில் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள். இன்று இந்த அற்புதமான இரண்டு நடிகர்களுக்கு இடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். எப்போதுமே இவர்களுடைய தாக்கத்தை என்னுடைய பயணத்தில் ஏற்றுக் கொள்ளவே விரும்புகிறேன். இவர்களை சந்தித்து சிறிது நேரம் செலவிட்டதில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வெளியாகும் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.