வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிய இரும்பு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்திற்கு சிவாஜி பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த்திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச்சிறப்புவாய்ந்த நடிப்பின்மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள் ஆகியோரை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன்.
தற்போது சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், டாக்டர் கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தன் குடும்பத்தினருடன் இறுதிக்காலம்வரை வாழ்ந்த இடம், சென்னை, தேனாம்பேட்டை சந்திப்பு அருகிலுள்ள தெற்கு போக் சாலை என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது செவாலியே சிவாஜிகணேசன் சாலை என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள அன்னை இல்லத்தில்தான். எனவே நடிகர்திலகம் வசித்த இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டுவரும் பாலத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்படுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.
தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தவேண்டும் என்று நடிகர்திலகத்தின் லட்சோபலட்ச ரசிகர்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய கோரிக்கையை தாங்கள் ஏற்று, பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.




