‛வேட்டுவம்' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா | ‛சிஸ்டம்' பட வெற்றிக்காக மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று நன்றி செலுத்திய ஜோதிகா | ஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிய தோனியின் மனைவி | ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர் | ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை | தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக 'கருப்பு' : மற்ற படங்களின் லிஸ்ட் இதோ... | ஐதராபாத்தில் விரைவில் ஐமேக்ஸ் தியேட்டர் | சில வருடங்களில் புஷ்பா 3 : நடிகர் ஜெகபதி பாபு தகவல் | டில்லி நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா | குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் இறுதிச்சடங்கு : அஜித் குடும்பத்தினர் அறிக்கை |

இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன், தற்போது நடிகராகவும், அவரது திரைப் பயணத்தை விரிவுபடுத்தி உள்ளார். 'பீஸ்ட்' படத்தை அடுத்து, அவர் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' படம் ஓ.டி.டி.,யில் வெளியாகி உள்ளது. அவர் நம் நாளிதழுக்கு அவர் அளித்த மினிபேட்டி: 'சாணிக்காயிதம்' கதை ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. ஏன், நாம நடிக்கக்கூடாதுனு நினைச்சேன். 'சாணிக்காயிதம்' டீமை, வெறிப்பிடிச்ச 'டீம்!' வேலையை தவிர எதுவும் யோசிக்காம, ஓடிட்டே இருந்தாங்க; எனக்கு நல்ல அனுபவமா இருந்துச்சு.
நடிக்க போகும்போது, இயக்குனர் செல்வராகவனை மூட்டை கட்டி வைச்சுட்டு, நடிகரா மட்டுமே போனேன். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்; இன்னும் நிறைய கத்துக்கணும். 'செட்'டுல, கீர்த்தியின் நடிப்பை நிறைய முறை வேடிக்கை பார்த்தேன். திறமையான நடிகை. கதை அமைஞ்சால், தனுஷுடன் இணைந்து நடிப்பேன். மீண்டும், '7 ஜி ரெயின்போ காலனி' மாதிரியான படங்களை இயக்கலாம்.
'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு, இறுதி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு. எதிர்கால திட்டம் எல்லாருக்கும் இருக்கும். சினிமாவில் பக்குவம் வரும்போது, இன்றைய நாளை தவிர பெரிய சிந்தனை எல்லாம் இருக்காது. இப்ப செய்ற வேலையை சரியாக செஞ்சா போதும்னு நினைக்கிறேன். என் படத்திலேயே 'ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை' இரண்டாம் பாகங்களை எடுக்கலாம். அதுக்கான களம், நேரம் அமையணும் என்றார்.




