மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம்' படத்தை முதலில் இயக்குனர் செல்வராகவன் தான் இயக்குவதாக இருந்தது. அதன் முன் தயாரிப்பு பணியின் போது செல்வராகவன் வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்தது.
தற்போது செல்வராகவன் அளித்த பேட்டியில், "விஸ்வரூபம் படம் என்னுடைய பார்வையில் நாம் ஒரு நாட்டை பற்றி வெறும் நெகடிவ் ஆக மட்டும் படங்களில் சித்தரிக்கப்பட்டு முத்திரை குத்தி பார்த்து வருகிறோம். இந்த பார்வையை விஸ்வரூபம் படத்தில் எனது கதையில் வேறு கோணத்தில் எழுதி இருந்தேன். நல்ல கதை அது. அந்த நாட்டில் எல்லாரும் கெட்டவர்கள் என நினைப்பது போல் முத்திரை உள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை உள்ளது. அங்கேயும் உள்ள நல்ல மனிதர்கள் குறித்து பேசி இருக்கும். ஆனால், இந்த கதைக்கு நான் வைத்த பெயர் விஸ்வரூபம் இல்லை 'கான்'. இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.