அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். ரோபோ சங்கரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
இதுபற்றி பார்த்திபன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் மைக் உடன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பார்த்திபன். அதன் உடன், ‛‛மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர். மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டர் ரோபோ சங்கர். மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முடிவில் முத்தமிட்டவர்'' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.