சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் |

ராஷ்மிகா மந்தனா நடித்த ‛தம்மா' ஹிந்தி படம் தீபாவளிக்கு திரைக்கு வந்த நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' படம் வருகிற நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து ‛மைசா' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இந்திய அளவில் பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
புதுமுக இயக்குனர் ரவீந்திரன் புல்லே என்பவர் இயக்கும் இந்த படத்தில் பழங்குடி இன பெண்ணாக நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான போது அதில் ஒரு ஆக்ரோஷமான பழங்குடியின பெண் கெட்டப்பில் அவர் காணப்பட்டார். இப்படத்தில் ராஷ்மிகாவுடன் தாரக் பொன்னப்பாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.