ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி |

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராம்கோபால் வர்மா ஒரு திகில் படத்தை இயக்குகிறார். ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக்  ஜோடி சேர்ந்து  நடிக்கிறார்கள். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார். 
நேற்று இரவு இயக்குனர் ராம்கோபால் ஒரு புதிய அவதாரத்தில் ஒரு கதாநாயகியின் படத்துடன் ரகசிய குறிப்பை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. அதோடு அது ரம்யா கிருஷ்ணன் என்று சோசியல் மீடியாவில் கமெண்ட்டும் கொடுத்து வந்தார்கள். ரசிகர்கள் யூகித்தது போலவே இன்று போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அதில், திகிலான ஒரு மர்ம பின்னணியை வெளிப்படுத்தக்கூடிய அதிரடியான தோற்றத்தில் மேல்நோக்கு பார்வையுடன் காணப்படுகிறார் ரம்யா கிருஷ்ணன்.