ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

'ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு' என்ற படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கி வரும் 'அரசன்' படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதோடு ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்தபடியாக தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். 'ஆரண்ய காண்டம்' படத்தை அடுத்து அவர் இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அந்த படத்தில் அவர் 'ஷில்பா' என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இந்த வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்காக தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி.
அதேபோல் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் இந்த புதிய படத்திலும் ஒரு வித்தியாசமான வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் இணையும் இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 16ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




