Advertisement

சிறப்புச்செய்திகள்

காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல்

16 பிப், 2026 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Exams-begin-Trouble-for-theaters
Advertisement

2026ம் ஆண்டின் துவக்க வாரங்கள் தமிழ் சினிமாவிற்கு சரியாக அமையவில்லை. மாபெரும் வெற்றி என்று எந்த ஒரு படமும் இன்னும் பெறவில்லை. கடந்த ஏழு வாரங்களில் 34 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்து குறிப்பிடத்தக்க லாபத்தைத் தந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

கடந்த வாரம் 7 நேரடி தமிழ்ப் படங்களும், 5 ரீ ரிலீஸ் படங்களும், 2 டப்பிங் படங்களும் வெளிவந்தன. இந்த வாரம் பிப்ரவரி 20ம் தேதி குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், சிவசம்போ, எம்ஜி 24” ஆகிய படங்கள் பிப்ரவரி 20ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள். அன்று வெளியாவதாக இருந்த 'தாய் கிழவி' படம் பிப்ரவரி 27ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் நாளை பிப்ரவரி 17 முதல் ஆரம்பமாகிறது. அடுத்த மாதம் மார்ச் 2ம் தேதி மாநில பாடத் திட்ட 12ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளும், மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளும் ஆரம்பமாகின்றன. அடுத்து இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் என அடுத்த இரண்டு மாதங்கள் தேர்வு மாதங்களாக இருக்கும். இதனால், தியேட்டர்களுக்கு வரும் குடும்பத்தினரின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிடும்.

ஏற்கெனவே முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாததால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து போயுள்ளது. தற்போது டி 20 உலகக் கோப்பை போட்டியும் பரபரப்பாக நடந்து வருகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் வெளியாகும் படங்களுக்கும் கூட இது தேர்வுக் காலம் போலத்தான். அதன் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்!மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - ... புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap