வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'ஆரண்ய காண்டம்' படத்தை 2011ல் இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, கவனிக்கப்படும் இயக்குனரானார். ஆனால் தனது அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை 8 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2019ல் தான் இயக்கினார். இதில் 'ஷில்பா' என்ற திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். சமந்தா, பஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி தேசிய விருதையும் பெற்றார்.
இந்த நிலையில், தற்போது தனது 3வது படத்தை 7 ஆண்டுகளுக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். அவர் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த புதிய படத்துக்கு 'பாக்கெட் நாவல்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் இப்படத்திலும் இணைந்துள்ளனர்.
இளையராஜா முதன்முறையாக தியாகராஜன் குமாரராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முந்தைய 2 படங்களுக்கும் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் படம் ரிலீசாகிறது. அடுத்து வெற்றிமாறன் இயக்கி வரும் 'அரசன்' படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார். அதோடு ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.




