'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மணிரத்னம் இயக்கி கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் தக்லைப். கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. அடுத்தபடியாக இளவட்டங்களை வைத்து ஒரு காதல் கதையை இயக்க உள்ளார் மணிரத்னம். அந்த படத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. பாக்கெட் நாவல் படத்தை விஜய் சேதுபதியும், கல்கி 2 படத்தை சாய் பல்லவியும் முடித்த பிறகு மணிரத்னம் இயக்கும் இந்த புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரிகிறது.




