ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மஹாராஜா. நிதிலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், சஞ்சனா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனார், படம் பெரிய வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து மஹாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய்சேதுபதி விரும்பினார். அதற்காக கதை எழுதுமாறு நிதிலனிடம் கேட்டிருந்தார். தற்போது நிதிலன் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதிவிட்டார். விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களை முடித்து விட்டு மஹாராஜாவிற்கு வருகிறார்.
தற்போது விஜய்சேதுபதி தவிர்த்த மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் வில்லன் அனுராக் காஷ்யப்பின் மகளை விஜய்சேதுபதி தன் மகள் போன்று வளர்ப்பதாக முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அந்த மகளை கேட்டு அனுராக் காஷ்யப்பின் சகோதரன் வருவது போன்றும், விஜய்சேதுபதி, அவரது மகள், புதிய வில்லன் இந்த மூவரை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.