எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கும் படம் 'போர்த் புளோர்'. எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கி உள்ளார். ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். தருண்குமார் இசையமைத்துள்ளார், லக்ஷ்மன் ஒளிபதிவு செய்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, "இந்த திரைப்படம் கனவுகளுக்கும், நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் 'யூ ஏ'சான்றிதழ் பெற்றுள்ளது. முகம் சுளிக்க வைக்காத, காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இருக்கும். பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லி இருக்கிறோம்" என்றார்.




