ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

திரைப்படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் சிவச்சந்திரன். திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்து அவர் இயக்கிய படம் 'என் உயிர் கண்ணம்மா'. எஸ்கே சங்கரலிங்கம் தயாரித்தார். இளையராஜா இசையமைத்தார். 1988ல் வெளிவந்த இந்த படத்தில் பிரபு, ராதா, லட்சுமி, ஜெய்கணேஷ், டெல்லி கணேஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் முதல் பாடல் காட்சி பொள்ளாச்சி பகுதியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இது ஹீரோ பிரபுவின் அறிமுகக் காட்சி. இந்த பாடல் காட்சிக்காக 50 யானைகள் 200க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நூறுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். பாடல் காட்சியும் பிரம்மாண்டமாக படமானது. படப்பிடிப்பிற்கு பிறகு பாடல் காட்சியை போட்டு பார்த்த போது பாடலுக்கும் பின்னணி இசைக்கும் காட்சிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
சிவச்சந்திரன் இயக்குனராக புதியவர் என்பதால் அவரால் சரியாக அந்த பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. மீண்டும் அந்த காட்சி எடுத்தால் பல லட்சங்கள் செலவாகும். இதனால் இளையராஜாவை சந்தித்து 'இப்படி நடந்து விட்டது என் முதல் பட வாய்ப்பு பரி போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது' என்று சிவச்சந்திரன் புலம்பினார்.
இளையராஜாவோ 'ஒன்றும் பயப்படாதே நான் சரி பண்ணித் தருகிறேன்' என்று சொல்லி. பாடல் காட்சியை போட்டு பார்த்து அதற்கு ஏற்ப பாடல் வரிகளையும் மெட்டையும் மாற்றி புதிய பாடலாக உருவாக்கி கொடுத்தார். இப்பொழுது பாட்டும் பாடல் காட்சிகளும் சரியாக பொருந்தியது.
இந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு சிவசந்திரன் இயக்கிய ஓரிரு படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு அவர் படம் இயக்குவதை விட்டு விட்டார்.