பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
தீபாவளிக்கு முதல்நாள் தனது அலுவலகத்தில் ஆதரவற்ற, ஏழை குழந்தைகளுக்கு விருந்து கொடுத்துள்ளார் விஷால். அந்த விருந்தில் அவர் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவும் கலந்து கொண்டுள்ளார். சரி, இவங்களுக்கு எப்பதான் கல்யாணம் என்று விசாரித்தால், இப்போது மகுடம் படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்த படத்தை அவரே இயக்குகிறார், ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு. அதற்கடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப்போகிறார்.
இதற்கிடையே, வரும் பொங்கலுக்கு நடிகர் சங்க புதுக்கட்டடம் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நடிகர் சங்க கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் எங்கள் திருமணம் என்று விஷால் பலமுறை பேட்டி கொடுத்துள்ளார். அதனால், வரும் தை மாதமே அவருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு என்கிறார்கள்.