பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் |

'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் சுவாசிகா. அந்த படத்தில் அவர் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுகள், நிறைய விருதுகளும் வாங்கினார். அந்த படத்தின் வெற்றி காரணமாக சூரியின் 'மாமன், ரெட்ரோ, கருப்பு' உட்பட பல படங்களில் கமிட்டானார். மாமனும் வெற்றி பெற சுவாசிகா மார்க்கெட் எகிறியுள்ளது.
இந்நிலையில், அவர் நடித்த 'போகி' படம் இந்த வாரம் வெளியாகிறது. அந்த படம் குறித்து சுவாசிகா எதுவும் பேசவில்லை. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து படக்குழுவிடம் கேட்டால், அவர் வேறு படத்தில் பிசி என ஒதுக்கிக்கொண்டனர். உண்மையில் இந்த படம் குறித்து சுவாசிகா பேச விரும்பவில்லையாம்.
காரணம், 2009ம் ஆண்டு 'வைகை' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சுவாசிகா. அப்போது அவர் பெயர் விசாகா. அடுத்து 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ தங்கையாக அவர் நடித்த படம் 'போகி'. அந்த படத்துக்கு அப்போதைய தலைப்பும் வேறு. பல சிக்கல்களில் பல ஆண்டு இடைவெளிக்குபின் இந்த வாரம் 'போகி' ரிலீஸ் ஆகிறது.
இப்போது சுவாசிகா மார்க்கெட் நிலவரம் வேறு என்பதால் போகி குறித்து பேச விரும்பவில்லையாம். மலைவாழ் கிராமத்தில் நன்றாக படித்து டாக்டர் ஆகும் சுவாசிகாவுக்கு வில்லன் கும்பலால் என்ன நடக்கிறது. அதற்கு அண்ணனான ஹீரோவும், அவர் காதலனும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்ற ரீதியில் போகி கதை செல்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனிக்கு மேலே உள்ள மலை வாழ் கிராமத்தில் நடந்தது. சாலை, தங்குமிடம் போன்ற வசதிகள் கிடையாது. அவர் அங்குள்ள வீட்டில் தங்கி, படப்பிடிப்புக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்று படக்குழு அவரை புகழ்ந்தாலும், தான் நடித்த பழைய படம் குறித்து இமேஜ் காரணமாக பேசாமல் எஸ்கேப் ஆகிறாராம் சுவாசிகா.




