என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பிரபு ஸ்ரீநிவாஸ் இடத்தில் உதயா நடித்த 'அக்யூஸ்ட்' படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் அரசியல்வாதி ஒருவர் கொலை செய்யப்படுவது போன்றும், அந்த கட்சியில் உட்கட்சி பிரச்னை, மறைந்த அரசியல்வாதி இடத்தை பிடிக்க சிலர் போட்டி போடுவதாகவும் சீன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல். அந்த கட்சியின் பெயர் தவெகவுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இது குறித்து உதயாவிடம் நிருபர்கள் கேட்க, 'படத்தில் ஒரு கட்சி பிரச்னை வருகிறது. அது விஜயின் த வெ க பிரச்னை அல்ல. அந்த கட்சிக்கு நாங்கள் வேறு பெயர் வைத்துள்ளோம். படம் பார்த்தால் அந்த உண்மை தெரியும். மற்றபடி, எங்கள் பட காட்சிக்கும், விஜயின் உட்கட்சி பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீணாக வதந்தி பரப்ப வேண்டாம்' என்றார்.
அதே சமயம் அக்யூஸ்ட் படத்தில் விஜயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பதாக ஒரு டிவி நியூஸ் காண்பிக்கப்படுவதாகவும் தகவல். தனது தம்பி ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில், விஜயுடன் இணைந்து நடித்து இருக்கிறார் உதயா. அவர் தந்தை ஏ.எல்.அழகப்பன் திமுகவில் இருந்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.