நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நிலையில், மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் கூலி படத்தை நேற்று பார்த்துள்ள லதா ரஜினி, இந்த படம் மிகச் சிறப்பாக இருப்பதோடு, இதுவரை ரஜினி நடித்த டாப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து கூலி படத்தைப் பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள். கூலி படத்தை நான் பார்த்து விட்டேன். அனைவரையும் கவரக்கூடிய வகையில் மாஸ் என்டர்டெய்னராக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.