நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் ' டி.என்.ஏ . இதில் நிமிஷா சஜயன், காயத்ரி, ரமேஷ் திலக், சேட்டன், விஜி சந்திரசேகர், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் உள்ளது. ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் 20ம் தேதியன்று படத்தை திரையரங்கில் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதே தேதியில் தனுஷின் குபேரா படம் வெளியாகிறது. இதனால் அதர்வா படத்திற்கான தியேட்டர்கள் குறையும் என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.