'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛96'. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பிரேம் குமார் அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதனை பிரேம் குமார் மறுத்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், "96 இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகம் குழுவை வைத்து தான் உருவாக்குவேன். அதேசமயத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் வேறு ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையை நடத்தினேன். அது 96 இரண்டாம் பாகம் இல்லை" என பதிவிட்டுள்ளார்.