தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சென்னையில் இன்று நடந்த பிளாக் மெயில் பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். காரணம், படத்தில் ஹீரோவாக நடித்தவர் அவர் நண்பர் ஜி.வி.பிரகாஷ். கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கி இருக்கிறார்.
படவிழாவில் ஆதிக் பேசுகையில் ''என்னை திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த பட இயக்குனர் மாறன் இரவு காட்சிகளை அதிகம் ரசித்து எடுப்பவர். ஆனால், ஹீரோ ஜி.வி.பிரகாசுக்கு இரவு பிடிக்காது. அவர் லைட் போட்டுக் கொண்டுதான் துாங்குவார். அவர் இந்த படத்துக்குபின் மாறியிருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ''அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி. அது குட் பேட் அக்லி மாதிரி இருக்காது, வேறு ஜானரில் இருக்கும். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு , அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்' என்றார்.
ஹீரோயின், தயாரிப்பாளர் குறித்து ஆதிக் சொல்லவில்லை. ஆனாலும், ரோமியோ பிக்சர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.