ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து, 77 காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை அவரது உயிர் பிரிந்தது.
கருணாநிதி - பத்மாவதி தம்பதியரின் மூத்த மகனான முத்து, 1948ம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தார். தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். மறைந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அவரை விட்டு பிரிந்தார். பல காலமாக தனித்து வாழ்ந்து வந்தார்.
கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான ‛மாட்டுத்தாவணி' படத்தில் தேவா இசையில் ‛அன்னமாரே....' என்ற பாடலை பாடினார் முத்து. அதுவே அவரின் திரையுலக பயணத்தின் கடைசி பயணமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது சகோதரர் முத்துவின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் முத்துவின் உடல் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.