'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

1966ம் ஆண்டில், காமெடி நடிகர் சந்திரபாபு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 'மாடி வீட்டு ஏழை'. சில நாட்களே படப்பிடிப்பு நடந்த நிலையில் படத்தில் நடிக்க மறுத்து எம்ஜிஆர் வெளியேறினார். படத்தின் நாயகி தொடர்பாக சந்திரபாபுவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டது.
பின்னர் 1981ல் இதே தலைப்பில் அதாவது மாடிவீட்டு ஏழை என்ற தலைப்பில் உருவான படத்தில் சிவாஜி, சுஜாதா, ஸ்ரீபிரியா நடித்தனர். 'ஏடந்துலா மேட' என்ற எந்த தெலுங்கு படத்தின் ரீமேக் இந்தப் படம். இந்த படத்திற்கு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார். அவரது உறவினர் அமிர்தம் இயக்கினார். பூம்புகார் பிக்சர்ஸ் சார்பில் செல்வம் தயாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பணமே வாழ்க்கை என்பதை கருத்தாக கொண்டு பணத்தின் பின்னால் அலையும் ஒரு தொழிலபரின் மனைவ பணம் இருந்தும் மகிழ்ச்சி இல்லாத ஏழையாக வாழ்வதுதான் படத்தின் கதை.