ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரி | ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ? | ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி | 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் | விஜய்யின் கடைசி படம் 'ஜனநாயகன்' - வசூல் சாதனை புரியுமா? | வினியோகஸ்தர் கொடுத்தும் பணத்தை வாங்க மறுத்தார் : ஆர்.பி.சவுத்ரியை பாராட்டும் லவ்டுடே இயக்குனர் | விஜய்யை கடுமையாக விமர்சித்தற்காக வருந்துகிறேன்: சேரன் அந்தர் பல்டி | தாமதமாகும் ப்ரீத்தி முகுந்தனின் பாலிவுட் படம் | விசித்திர விளையாட்டு படம்: பாரதிராஜாவின் உதவியாளர் இயக்குகிறார் | 'தி ஒடிசி': ஜூலை 17ல் வெளியாகும் கிறிஸ்டோபர் நோலன் படம் |

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 29வது படம் 'தெனாலி ராமன்'. 1956ம் ஆண்டு வெளிவந்த படமாகும். பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் வெளிவந்தது. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் திரைப்படமாக்கினார்கள்.
தெனாலி ராமனாக சிவாஜி கணேசன், கிருஷ்ணதேவராயராக என். டி. ராமராவ், அப்பாஜியாக சித்தூர் வி. நாகையா, ராஜகுருவாக நம்பியார், ராமனின் மகனாக மாஸ்டர் வெங்கடேசுவர், கிருஷ்ணஸ்ரீயாக பானுமதி ராமகிருஷ்ணா, கமலாவாக ஜமுனா, ராதாவாக சுரபி பாலசரசுவதி திருமலாதேவியாக நடித்திருந்தார்கள்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தமிழ் பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதினார். தெலுங்கு பதிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழில் வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டின்போது ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. கண்ணதாசனும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இந்த படத்த்தின் போது சிவாஜி காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரசில் சேர்ந்தார்.
இதை விமர்சிக்கும் விதமாக கண்ணதாசன் தனது பத்திரிகையில் படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றான சிவாஜியை கழுத்து வரை புதைத்து யானை ஒன்று தன் காலால் அவர் தலையை நசுக்க முயல்கிற காட்சியை விளம்பரமாக வெளியிட்ட கண்ணதாசன் 'கணேசனின் எதிர்காலம்' என்று தலைப்பு கொடுத்திருந்தார்.
அதாவது காமராஜர் என்கிற பெரிய அரசியல் சக்தி சிவாஜி என்கிற கலைஞனை நசுக்கப்போகிறது என்பதாக இதன் பொருள். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக சிறிது காலம் கருத்து வேறுபாட்டுடன் இருந்த கண்ணதாசனும், சிவாஜியும் பின்னர் மீண்டும் இணைந்தனர்.




