Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி

06 மே, 2026 - 03:49 IST
எழுத்தின் அளவு:
RB-Chowdhurys-body-arrives-in-Chennai-Film-industry-pays-tribute
Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 98 படங்களை தயாரித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் மகுடம் படத்தை, தங்களது 99வது படமாக தயாரித்துள்ளார். ராஜஸ்தானில் திருமண நிகழ்வுக்காக சென்ற சவுத்ரி நேற்று அங்கு நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் இன்று மதியம் 2 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் அவரது மகனான ஜீவாவின் தி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவுத்ரியின் உடல் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10:30 மணியளவில் சென்னை, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடக்கிறது.

திரையுலகினர் அஞ்சலி
ஆர் பி சவுத்ரி உடலுக்கு விஷால், கார்த்தி, விக்ரம், தனுஷ், சூர்யா, எம்எஸ் பாஸ்கர், சித்தார்த், சிற்பி, செல் முருகன், தேனப்பன், வரலட்சுமி, கிரிஷ், கலையரசன், பேரரசு, ஆர்வி உதயகுமார், ஏஎல் அழகப்பன், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், தன்ஷிகா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா, எஸ் தாணு, கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி, நிழல்கள் ரவி, ஆனந்த ராஜ், அதர்வா, சதீஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரேமலதா, சுதீஷ், சண்முக பாண்டியன், எடிட்டர் மோகன், இயக்குனர் மோகன்ராஜா, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ்'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ? ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap