ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பாலிவுட் திரையுலகின் குறிப்பிடத்தக்க இளம் நடிகரான வருண் தவான் நடிப்பில், கடந்த ஜனவரி மாதம் 'பார்டர் 2' திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள 'ஹை ஜவானி தோ குச் ஹோலா ஹை' (Hai Jawani Toh Ishq Hola Hai) படம் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தை அவரது தந்தையான டேவிட் தவான் இயக்கியுள்ளார்.
வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது வருண் தவான் கவனம் செலுத்தி வருகிறார்.. அதன் ஒரு பகுதியாக, மும்பை நகர வீதிகளில் ஆட்டோக்களில் பயணித்து தனது படத்தைப் புரமோட் செய்து வருகிறார்.. "ஆட்டோ ரிக்ஷா பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார். தந்தையின் படம் என்பதாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இப்படி ஒரு புதிய உத்தியை அவர் கையாள்கிறாரோ என்னவோ ?!