ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீதிகா தற்போது இயக்குனராகி உள்ளார். பி.ஆர்.ஜி. ஜெகந்நாதன் பிக்சர்ஸ் பேனரில் ஸ்ரீதிகாவே தயாரித்து, இயக்கி வரும் படம் 'டே 11'. ஆதர்ஷ் மற்றும் மனோஜ் நாயகர்களாகவும் ஸ்வேதா அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர். ரவிச்சந்திரன், அபிமன்யு, தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனில் இசை அமைத்துள்ளார், செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து ஸ்ரீதிகா கூறும்போது, ''ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொண்ட கலகலப்பான திரைப்படமாக 'டே 11' உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒன்றை இதில் கூறியுள்ளோம். ஒரு விசித்திர விளையாட்டுக்குள் நுழையும் கதாபாத்திரங்கள், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும்” என்றார்.




