'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறி கொடுத்தது. அது மட்டுமல்ல ஸ்டாலின் கூட அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போகும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலினுக்கு யாருமே எந்தவிதமான ஆறுதல் பதிவுகளையும் எக்ஸ் தளத்தில் போடவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” எனப் பேசியுள்ளார்.
இவர்களது இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
தேர்தலுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
ஸ்டாலினுடனான ரஜினிகாந்த்தின் சந்திப்பு அவருடைய விஜய் எதிர்ப்பு நிலையை தொடர்வதாகவே காட்டுகிறது.