விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் |

விஜய் நடித்த வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக எஸ்பிசி 63 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் சல்மான்கானும், நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் சல்மான்கானுடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க பஹத் பாசில் கமிட்டாகி இருக்கிறார். அதேபோல் இன்னொரு முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமியும் கமிட்டாகி உள்ளார். தில்ராஜு தயாரிக்கும் இந்த படம் 2027 ஈத் பண்டிகையின்போது திரைக்கு வரவுள்ளது.