கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி , ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா நடிப்பில் வெளியான படம் 'படையப்பா'. இப்படத்தை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் ரஜினி. இதில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் பி.எல்.தேனப்பன். தற்போது நடிகராகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, 'படையப்பா' கடந்த ஆண்டின் இறுதியில் மறுவெளியீடு செய்யப்பட்டது. மறு வெளியீட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலையும் கொடுத்தது. இதனைக் கொண்டாடும் விதமாக தற்போது தேனப்பனை அழைத்து 5 பவுன் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி. படத்தின் மறுவெளியீட்டை நடத்தி கொடுத்தது தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.