சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கடைசியாக அவர் இயக்கிய 'ஓப்பன் ஹெய்மர்'. முந்தைய படங்களை ஒப்பிடும்போது சுமாரான வரவேற்பை பெற்றாலும் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13வது படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு 'தி ஒடிசி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேட்டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர் ஹோமரின் கவிதையை தழுவி உருவாகும் இப்படம் வருகிற ஜூலை 17ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மணையில் உள்ள சதிகாரர்களால் துரத்தி அடிக்கப்பட்ட மன்னன், படை திரட்டி மீண்டும் வந்து போராடி தன் அரண்மணை, மகனைவி, மகனை மீட்பதுதான் கதை. நிறைய சரித்திர படங்களில் பார்த்ததுதான். பாகுபலிகூட இந்த மாதிரியான கதைதான். இதை நோலன் தனது ஸ்டைலில் எப்படிச் சொல்லப்போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பு.
இந்த படம் ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்டு வருவதால் இதன் ஐமேக்ஸ் வெளியீட்டைக் காண உலக மக்கள் ஆர்வமாக உள்ளனர். என்றாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் டீசர் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.




