மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

அந்த காலத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் குகோர். பல அழியாத கிளாசிக் படங்களை உருவாக்கியவர், அவற்றில் ஒன்று 'கேஸ்லைட்'. இந்த படத்தின் கதையை தழுவி சி.என்.அண்ணாதுரை எழுதிய நாவல்தான் 'ரங்கோன் ராதா'.
இந்த நாவலை கருணாநிதி திரைக்கதை வடிவமாக எழுதி பின்னர் அது படமானது. சிவாஜி, ஹீரோ, வில்லன் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த படம் இது.
கோட்டையூர் தர்மலிங்க முதலியார் (சிவாஜி), வெளியுலகிற்கு ஒரு உத்தமராகத் தோன்றும் ஒரு தந்திரமான மனிதர். அவரது மனைவி ரங்கம் (பானுமதி). பணக்கார வீட்டு பெண். ரங்கத்தின் தங்கை தங்கம் (ராஜசுலோச்சனா). மனைவியின் தங்கை தங்கத்தை திருமணம் செய்து கொண்டால் அவர்களது முழு சொத்தையும் அடையலாம் என்று திட்டமிடும் முதலியார். முதல் மனைவிக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அதன் மூலம் தங்கத்தை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுவார். அந்த திட்டங்கள் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. சிவாஜி கொடுமைக்கார கணவனாகவும், காமுகனாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கி இருந்தார், டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.