ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 கோயிலுக்கு வந்த இவர்கள் மணவாள மாமுனிகள் சன்னதி, ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் இரவு 8:35 மணிக்கு திருப்பாவை திவ்யபாசுரம் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இளையராஜா பேசினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச வெங்கடேஷ அய்யங்கார் குழுவினர் செய்திருந்தனர்.