'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்துக்கு இன்னமும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை. இதை ரஜினிகாந்த்தே வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதேசமயம், அந்த படத்தை லோகேஷ் இயக்க வேண்டாம், அவருக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம், ரிஸ்க் என திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும் விரும்புகிறார்களாம்.
காரணம், லோகேஷ் இயக்கிய 'கூலி' படம் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். 'பீஸ்ட்' என்ற தோல்விப்படம் கொடுத்த நெல்சன்தான், அடுத்து ரஜினியை வைத்து 'ஜெயிலர்' என்ற ஹிட் படத்தை கொடுத்தார். ஆனால், லோகேஷ் கதை வேறு. அவர் வன்முறை, ஆக்சன், கடத்தல், போதை விவகாரம் என குறிப்பிட்ட ஏரியாவில் சுற்றி வருகிறார்.
ரஜினியும், கமலும் இணையும்போது அந்த கதை இந்தியளவில் பேசப்படணும். இருவருக்கும் சமமான வாய்ப்பு தரப்படணும். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுத்து முடிக்கப்படணும். பட்ஜெட் அதிகமானால் டேபிளில் லாஸ் ஆகும். ஆகவே, லோகேஷ் தவிர்த்து வேறு இயக்குனரை தேட வேண்டும், ரஜினி, கமல் என்ற இரண்டு பெரிய ஹீரோக்களுக்காக அந்த கதை எழுதப்படணும். அதில் ஏகப்பட்ட ஹீரோயிசம், கமர்ஷியல் விஷயங்கள் இருக்கணும். லோகேஷ் கதையில் இருவரும் கேரக்டராக இருக்கக்கூடாது என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.
சரி, அப்படிப்பட்ட இயக்குனர் யார் என்றால் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத், ராஜமவுலி, ஜீத்து ஜோசப், சிறுத்தை சிவா தொடங்கி பல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி இயக்குனர்கள் பெயர்களையும் பலர் சொல்ல, இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்க முடியாமல் ரஜினி, கமல் தவிக்கிறார்களாம். பல ஆண்டுகளுக்குபின் இந்த கூட்டணி உறுதியாக உள்ளது. இது பேச்சளவில் இல்லாமல், செயலுக்கு வர வேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.