சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
பாடகர் மனோவின் மகன் துருவ் 'வட்டக்கானல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாக்புகழேந்தி இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய பாடகர் மனோ, ''நான் கஷ்டப்பட்டு பாடி சம்பாதிக்கிறேன். ஒரு பாடலுக்கு சில ஆயிரங்கள் கிடைக்கிறது. ஆகவே, என்னால் படம் தயாரிக்க முடியாது அதற்கு மனசும் வரவில்லை. என் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் நீங்க படம் தயாரியுங்க. நாங்க சப்போர்ட் செய்கிறோம் என்கிறார்கள். அப்படி செய்தால் அந்த நட்பு முறிந்துவிடும். பல கோடி ஒரே நேரத்தில் காணாமல் போய்விடும்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பாடகர் எஸ்பிபி தொடங்கி பலர் படம் தயாரித்து கஷ்டப்பட்டத்தை பார்த்து இருக்கிறேன். குறிப்பாக, அண்ணன் எஸ்.பி.பி படம் தயாரித்தார்; அதனால் ஏற்பட்ட கடனுக்கு பாட்டு பாடி வட்டி கட்டினார். ஆகவே, பாடுவதை மட்டுமே நான் தொழிலாக வைத்து இருக்கிறேன். என் மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட, இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். என் அன்பு வேண்டுகோளை ஏற்று சங்கர் மகாதேவன், கார்த்திக் போன்ற பாடகர்கள் இந்த படத்தில் பாடிக்கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி'' என்றார்.
வட்டக்கானல் என்பது கொடைக்கானலில் உள்ள ஒரு ஏரியா. போதை காளான் விற்பனைக்கு புகழ்பெற்றது. இந்த படமும் அந்த போதைக்காளன் பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். தனது மகன் எஸ்.பி.பி சரண் தயாரித்த மழை உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் அதை அடைக்க பல்வேறு இசைக் கச்சேரிக்களை நடத்தி, பல்வேறு நாடுகளுக்கு சென்று அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வட்டி கட்டியிருக்கிறார் எஸ்பிபி. அதைதான் மனோ பேசியிருக்கிறார்.