அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகரும் இசையமைப்பாளமான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் நடித்த பிளாக்மெயில் படம் குறித்து பேசினார். அப்போது அவர் இசையமைப்பாளராக, நடிகராக பல படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை. பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்து உள்ளேன் என்றார். குறிப்பாக, காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் நல்ல கதை என்பதால் சம்பளம் வாங்கவில்லை. இயக்குனர் வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரின் அநீதி படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கும் சம்பளம் வாங்கவில்லை என்ற புது தகவலை சொன்னார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக தனது படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறேன் என்றார். தான் நடித்த, இசை அமைத்த படங்கள் பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும்போது அவற்றின் ரிலீஸுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் கூறினார். இப்படி விட்டுக் கொடுத்த சம்பளத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்ற தகவலும் கூறினார். பிளாக்மெயில் படம் வெளியாகவும் அவர் கணிசமான தொகையை விட்டு கொடுத்து இருப்பதாக தகவல்.