நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ரஜினியை வைத்து தான் இயக்கிய கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்த லோகேஷ் கனகராஜ், ஹிந்தி நடிகர் அமீர்கானையும் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, அடுத்தபடியாக அமீர்கான் நடிப்பில் ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அதோடு கார்த்தி நடிப்பில் கைதி-2 படத்தையும் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது கூலி படத்திற்கு பிறகு ரஜினி , கமலை இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர்களும் ஒத்துக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக அமீர்கானை வைத்து படம் இயக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார் லோகேஷ் கனகராஜ் என தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமின்றி கார்த்தி நடிப்பில் தான் இயக்க இருந்த கைதி-2 படத்தையும் கால தள்ளி வைத்திருக்கிறார்.