ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் மதராஸி . மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கிய கஜினி, துப்பாக்கி படங்களிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான படமாக மதராஸி இருப்பதாகவும் ஒரு சாரர் கூறி வருகிறார்கள். இந்த படம் திரைக்கு வந்து இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இப்படம் 3 நாட்களில் 65 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் வரை இந்த படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து 100 கோடி வசூலை எட்டி பிடித்து விடும் என்று எதிர்பார்க்கிறது.
இதேபோல் கடந்த ஐந்தாம் தேதி வெளியான இன்னொரு படம் காந்தி கண்ணாடி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மற்றும் பல காமெடி ஷோக்களில் பங்கேற்று வந்த நடிகர் கே.பி.ஒய்.பாலா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பாலாவுடன் இயக்குனர் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஷெரிப் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு மீடியமான வரவேற்பு இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் சுமார் 2 கோடி வசூல் செய்துள்ளதாம்.




