ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, காட் பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது மன சங்கர வரபிரசாத் காரு என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அனில் ரவிபுடி இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவி நயன்தாராவுடன் இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்திருக்கிறார். இப்படம் 2026 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இதில் சிரஞ்சீவி, நயன்தாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கட்சியை வெளிநாடுகளில் படமாக்கிய நிலையில், தற்போது அவர்கள் இளமையான கெட்டப்பில் தோன்றும் ஒரு பிளாஷ்பேக் டூயட் பாடல் காட்சியை ஐதராபாத்தில் இன்று முதல் படமாக்குகிறார்கள். இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆடம்பரமான உடையணிந்து சிரஞ்சீவியும் நயன்தாராவும் நடனமாடுகிறார்கள். குறிப்பாக இந்த டூயட் பாடலில் நயன்தாரா கவர்ச்சிகரமான தோற்றத்தில் நடிக்கிறாராம். இந்த பாடலில் அவர்கள் இருவரையும் தொழில்நுட்ப உதவியுடன் மிக இளமையாக காண்பிப்பதற்கும் இயக்குனர் அனில் ரவி புடி திட்டமிட்டுள்ளாராம்.




