ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது அவர் நடித்து வரும் ‛உஸ்தாத் பகத்சிங்' படம் தயாராகி வருகிறது. ஹரிஷ் சங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்திபனின் பிறந்தநாளான நேற்று வெளியிட்டு உறுதி செய்துள்ளது படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதற்கு முன்னதாக 2012ல் ராம்சரண் நடிப்பில் வெளியான ரச்சா என்கிற தெலுங்கு படத்தில் முதல்முறையாக பார்த்திபன் நடித்திருந்தாலும் அது சில நிமிடங்களே வந்து போகும் கவுரவ தோற்றமாக இருந்தது. அந்த வகையில் பவன் கல்யாண் நடிக்கும் படத்திற்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் நுழைந்துள்ளார் பார்த்திபன்.




