மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் |
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். அது குறித்த அவரின் வழக்கமான பதிவு : 'Mischievous' பார்த்திபன் Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்! குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடு படுகிறேன்.'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்.Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக.அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்!குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான்.இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்….
It tally with a tale of 'Italy shop' by Danish '' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் பார்த்திபன், ‛அறிவு' என்ற வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரின் முதல் பார்வையையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.