ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பைசன்'. கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக தென் மாவட்ட கபடி வீரராக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
அதோடு இதற்கு முன்பு 'வர்மா, மகான்' என்ற இரண்டு படங்களில் நடித்திருந்தபோதும் இந்த பைசன்தான் என்னுடைய முதல் படம் என்று கூறும் துருவ் விக்ரம், ''இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதைக் கருவை படமாக்கி இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ், எனக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கொடுத்த நம்பிக்கை காரணமாகவே இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். அவரது உறுதியும் தெளிவும் எனக்கு இந்த படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியது'' என்று கூறுகிறார்.
மேலும், ''இந்த படத்தில் நடிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் மொத்த ஸ்கிரிப்டையும் படித்தேன். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அப்படியே ஸ்பாட்டுக்கு சென்றேன்'' என்றார். இந்த பைசன் படம் அக்டோபர் 17ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.