பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழில் ஜீவா, விக்ரம் இணைந்து நடித்த டேவிட், துல்கர் சல்மான் நடித்த சோலோ மற்றும் போர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் பிஜாய் நம்பியார். ஹிந்தியில் தற்போது தனது புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் இவர்களது சோசியல் மீடியா உரையாடலின் மூலமாக வெளிப்பட்டு உள்ளது.
பிஜாய் நம்பியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 13 வருடங்களுக்கு முன்பு மரியான் திரைப்படத்தில் பார்வதியை பார்த்து பிரமித்து போனேன். அதன்பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நாங்கள் இணைய இருக்கிறோம். நன்றி பார்வதி. மீண்டும் இணைந்து பணியாற்ற இன்னொரு 13 வருடம் நாம் காத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பார்வதி இது குறித்து கூறும்போது, “13 வருடம் 13 நாட்கள்... இனி உங்களை நான் காத்திருப்பில் விடமாட்டேன். பல அற்புதமான கதைகளில் நாம் இணைந்து பணியாற்றுவோம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளவர் இந்த பதிவின் முத்தாய்ப்பாக, “எங்கேயும் போக மாட்டேன்” என்று பிஜாய் நம்பியாருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தையையும் கூறியுள்ளார்.