நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2019-ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது எம்புரான் என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். படம் ஓரளவு நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் தேவையில்லாத மத சர்ச்சைகளில் சிக்கியதுடன் இன்னொரு பக்கம் முதல் பாகம் போல இல்லையே என்கிற விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது புரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தார் பிரித்விராஜ். இரண்டாம் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்திற்கு அஸ்ரேல் என டைட்டில் வைக்கப்படலாம் என இந்த படத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்புரான் படத்தின் கிளைமாக்ஸில் உஷா உதூப் குரலில் இடம் பெற்ற பாடலில் இந்த அஸ்ரேல் என்கிற வார்த்தை இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி மூன்றாம் பாகத்திற்கு இது பொருத்தமான டைட்டிலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.