வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே போதைப்பொருள் பழக்கம் இருந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அப்படி பல வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் இவர். அதேபோல வளர்ந்து வரும் இளம் நடிகரான மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் ஸ்ரீநாத் பாஷி (குணா குகைக்குள் விழுந்தவர்) என்பவரும் படப்பிடிப்பின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீதும் குற்றச்சாட்டு உண்டு. அதற்காக அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கையும் எடுத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை கேரளாவில் ஒரு இடத்தில் நடத்திய சோதனையில் சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா உடன் ஒரு பெண்ணும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் மேலே சொன்ன இரண்டு நடிகர்களுக்கும் போதை பொருள் சப்ளை செய்ததாக கூறியுள்ளாராம். ஆனாலும் ஆதாரம் தேவை என்பதால் அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்து ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ள தகவல்களை கம்ப்யூட்டர் வல்லுனர்களின் உதவியுடன் மீட்டெடுக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.