இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

திருமணத்திற்கு பிறகு உடல் பெருத்திருந்த குஷ்பு, கடந்த சில ஆண்டுகளாக வெயிட் குறைக்க தொடங்கினார். தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்லிம்மாகி, ஜீன்ஸ், வெள்ளை நிற சட்டையில் ஒரு செல்பி எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து சிலர் நீங்கள் எடை குறைத்த ரகசியத்தை சொல்லுங்கள் என்று குஷ்பு இடத்தில் கெஞ்சி கேட்டு வருகிறார்கள்.
அதற்கு குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த பயணம் அற்புதமாக இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும், சோர்வாகவும் இருந்தது. ஆனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடாதீர்கள். ஒரு குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும். பாதுகாப்பின்மையை அதிகரித்து அனுமானங்களுடன் வாழ்பவர்களுக்கு வயிற்று எரிச்சல் இருக்கும். எனக்கு முழுமையாக புரிகிறது. உங்களுக்கு உதவ நான் செய்யக்கூடிய ஒரு நல்ல அமிலத்தன்மை எதிர்ப்பு மருந்தை பரிந்துரைப்பது, கடினமாக உழைக்க சொல்வது மட்டுமே' என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.