இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் தயாராகி ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'தக் லைப்'. இப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. நாளை இந்தப் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசை வெளியீடு, மற்றும் இந்திய சுற்றுப்பயணம், வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஆகியவை நடைபெற உள்ளன.
இப்படத்திற்கான பட்ஜெட் சுமார் 300 கோடி என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் வழக்கமாக சிக்கனமாக செலவு செய்பவர். மிதமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகப் படத்தைக் காட்டுபவர் எனப் பெயர் பெற்றவர். ஒரு கமர்ஷியல் படத்திற்கான பட்ஜெட்டாக அவருக்கு இது அதிக பட்ஜெட்தான். அவ்வளவு செலவு செய்திருந்தால் படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருக்க வாய்ப்புள்ளது.
இருந்தாலும் அதில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவற்றிலேயே எடுத்துவிட்டார்கள் என்பது தற்போதைய தகவல். இப்படத்திற்கான ஓடிடி உரிமையை கடந்த வருடமே 150 கோடிக்கு விற்றுவிட்டார்கள் என்று செய்திகள் வெளியானது. தற்போது படத்தின் சாட்டிலைட் டிவி உரிமையை 60 கோடிக்கும் கூடுதலாக விற்றுள்ளார்கள் என்று தகவல் வந்துள்ளது. இரண்டையும் சேர்த்தால் அதுவே 210 கோடி. படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு. மேலும் தியேட்டர் உரிமையாக விற்கப்பட்ட வகையில் அவையும் 100 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
அதனால், படத்திற்காக இந்தியா டூர், வேர்ல்டு டூர் என்கிறது கோலிவுட் வட்டாரம். 500 கோடிக்கும் அதிகமாக வசூல் டார்கெட் உள்ளதாம்.